தீமை கண்டு தீயாய் எழுவோம்!

Sunday, August 13, 2006

காக்கை குருவியும்...

காக்கை குருவியும் காட்டுக் குயில்களும்
கண்டோமே அன்றுநம் சொந்தமென! - அற்ப
மானிடரேயிதை மறந்திட்டே இன்றுநீர்
அண்டை வீட்டார்களுடன் சண்டையென்ன?

முப்பதுகோடிகள் முகம்தனைக் கொண்டுமே
வாழ்ந்தாளே பாரதத்தாய் நிம்மதியாய்!
நூறு கோடிகளாய் முகம் ஆனபோதினிலவள்
அல்லல்கள், இன்னல்கள் காண்பதென்ன?

வேற்றுமையிலொரு ஒற்றுமையாம் என்றே
பாரினில் பாரதம் திகழக் கண்டோம்! - அந்த
ஒற்றுமைக்கும் இங்கே வேட்டு என இன்று
சண்டைகள் செய்தே நாம் வீழ்வதென்ன?

8 comments:

said...

வாழ்த்துக்கள் நண்பரே!!

காக்கை கூட ஒற்றுமையாய் இருக்குது

நம் மனித இனம் மட்டும் ஏன் இப்படி நம் உயிரையே குடிக்குது இங்கே

said...

அருமையா இருக்கு ந.பாரதி

நகல்தான் என்றாலும்.வார்த்தைகளை தேர்ந்தெடுக்கவும் திறமை வேணுமில்ல,
அது உங்களிடம் இருக்கு.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
தம்பி

said...

//நம் மனித இனம் மட்டும் ஏன் இப்படி நம் உயிரையே குடிக்குது இங்கே//

உண்மைதான் மின்னுது மின்னல்.
:(

அதை நம்மால் சிறிதளவேனும் மாற்ற முடியும் என்றால் அதுவே மகிழ்ச்சி!
அதுவே நம் நோக்கமும்.

said...

//நகல்தான் என்றாலும்.வார்த்தைகளை தேர்ந்தெடுக்கவும் திறமை வேணுமில்ல,
அது உங்களிடம் இருக்கு.
//

நன்றி தம்பி.

இதில் திறமை என்ன இருக்கிறது. உள்ளத்தின் குமுறல்கள் அவ்வளவே!

said...

(நவீன) பாரதி,

பாரதியின் எழுத்துக்களில் மூழ்கி நீந்தியிருப்பீர்கள் போலிருக்கிறது. அல்லது பாரதியே உங்கள் விசைப்பலகையில் புகுந்து கொண்டானா? முதல் படிப்பில் பாரதி கவிதை என்றே நினைத்துக் கொண்டேன்! தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

காக்கையும் குருவியும் தன்னினம் என்று
கற்பனை செய்தவன் மண்ணிலே
சாக்கினில் வடித்த மத வெறி கொண்டு
சாவை விதைப்பதன் பின்னிலே

அண்டை வீட்டின் கரமுண்டென்று
அறிந்துணர்ந்த பின்னரும்
குண்டை விதைக்கும் கொடியவரை நாம்
கோவில் கட்டியா கும்பிடணும்?

அன்னை மண்ணின் உடலை அறுத்து
அன்னியமானவன் அவனென்றால்
பின்னை யும்அவன் கூலிகளாகும்
பேடிகள் இந்தியர் ஆகுமா?

எத்தனை ரத்தம் குண்டடி சத்தம்
இந்திய உயிர்கள் இளைத்ததா
எம்மிடை இருந்து எம்முடன் வாழ்ந்தும்
இந்திய நாட்டை அழிப்பதா?

ருத்திரம் பழகு சொன்னவன் பாரதி
சித்தம் சுரணையை நீக்கினால்
உத்திரம் தன்னில் ஒருமுழக் கயிற்றில்
உடலினைக் கட்டித் தொங்கலாம்.

said...

நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர.

said...

//காக்கை குருவியும் காட்டுக் குயில்களும்
கண்டோமே அன்றுநம் சொந்தமென! //
என்று நாம் அப்படி கண்டோம்?

//இன்றுநீர்
அண்டை வீட்டார்களுடன் சண்டையென்ன?//
இன்று மட்டும்தான் என்பதை ஒத்துக்கொள்ள மாட்டேன். மனித இயற்கையே இப்படித்தான் என்பது என் கருத்து

//முப்பதுகோடிகள் முகம்தனைக் கொண்டுமே
வாழ்ந்தாளே பாரதத்தாய் நிம்மதியாய்!//
எப்பொழுது அப்படி நிம்மதியாக வாழ்ந்தாள் என்று தெரியவில்லையே?