தீமை கண்டு தீயாய் எழுவோம்!

Thursday, August 10, 2006

சாதிகள் இருக்குதடி பாப்பா!

சாதிகள் இருக்குதடி பாப்பா! - அவற்றை
சான்றிதழில் மட்டும்கொள் பாப்பா!
சாத்திரங்கள் தேவையில்லை பாப்பா!- விஞ்ஞானச்
சூத்திரங்கள் படித்திடடி பாப்பா!

அஹிம்சையும் நல்லதொரு வழிதான்
அதற்குமோர் அளவுகொள் பாப்பா!
தீவினை கண்டு அச்சங்கள் வேண்டாம்
தீயென எரித்திடு பாப்பா!

12 comments:

said...

wow...romba romba nalla irukku
idhula innum koncham add pannungalen

said...

அம்மணி வருகைக்கு நன்றி!

இதனை ஆங்கிலத்தில் சொல்லியது ஏனோ?

said...

உங்கள் வருகையின் நோக்கமும் எழுத்தும் நன்றாக உள்ளது.

said...

கலை அரசன்,
மிக்க நன்றி.

said...

ஆஹா!!

வாங்க நவீன முண்டாசுக்கவிஞ்சரே!

அருமையா எழுதறிங்களே.

தொடரட்டும் உமது பணி

அன்புடன்
தம்பி

said...

தம்பி மிக்க நன்றி!

தொடர்ந்து வருகை தருக!

said...

Doondu has left a new comment on your post "சாதிகள் இருக்குதடி பாப்பா!":

தங்கள் எழுத்துக்களால் ஜாதியைச் சொல்லும் மிருகங்களில் ஒன்றாவது திருந்தினால் அகம் மகிழ்வேன்.

said...

அற்புதமாக இருக்குதைய்யா..

நவீன பாரதியின் ஆத்திச் சூடி விரைவில் வெளி வரும் என்று நம்பலாமா?

பாலா

said...

பாலா மற்றும் agner,

நன்றிகள் பல!

said...

உங்களுக்குள்ளே இப்படி ஒரு கவிஞரா!!!!!!!!!!!!!!!!!

//சாதியை இந்த மாதிரி கவிதைகளால் ஒழிக்க முடியாது//
உண்மைதான்


//அதற்காக இந்திய/தமிழக அரசு தனி சட்டம் கொண்டு வந்தால்தான் முடியும்//
அப்பொழுது மட்டும் ஒழிந்து விடுமா என்ன?

said...

ம்ம்.. வாழ்த்துக்கள்.ஜாதிவெறியர்களை எழுத்துப்புரட்சியால் திருத்தமுடியாது... அவர்களுக்கும் அடி உதைதான் சரி.. என்ன சொல்றீங்க பாரதி?

said...

ம்ம்.. வாழ்த்துக்கள்.ஜாதிவெறியர்களை எழுத்துப்புரட்சியால் திருத்தமுடியாது... அவர்களுக்கும் அடி உதைதான் சரி.. என்ன சொல்றீங்க பாரதி?