தீமை கண்டு தீயாய் எழுவோம்!

Wednesday, August 09, 2006

சட்டங்கள் செய்தென்ன கண்டோம்?

சட்டங்கள் செய்தென்ன கண்டோம்? - அதில்
சந்துகள், பொந்துகள் வசதியாய்க் கொண்டோம்!
செல்வம் படைத்தோர்க்கொரு நீதி - பாழும்
வறியவர்க்கு இங்கெங்கே மீதி?

அன்றொரு சுதந்திரம் கண்டோம்! -இன்றரசியல்
செய்வோர்க்கு அடிமையாச் சென்றோம்!
வாக்கு அளிப்பதோர் கடமை - இங்கே
ஐந்தாண்டு காலத்தில் அதுவுமோர் மடமை!

அன்பே கடவுளென்று உணர்த்த - பல
சான்றோர்கள் தோன்றினர் அன்று!
அவரே கடவுளெனக் கொண்டு- வீண்
சண்டைகள் கொண்டோமே இன்று!

தன்நலம் நீக்கியும் பொதுநலம் ஓங்கிட
வாழ்ந்திட்ட பெரியோர்கள் அன்று!
பிறநலம் தேயினும் வாழ்ந்திடுவோமென
சுயநலம் வாழுது இன்று!

6 comments:

said...

சுயநலம் வாழுது இன்று!//
யாருக்குத்தான் இல்லை சுய நலம்; ஆனால் அடுத்தவனைக் கெடுத்து நல்லது தேடாமல் இருந்தால் போதுமே. அதற்கும் வேண்டும் சட்ட திட்டங்கள். அந்தச் சட்ட திட்டங்களைத் தாண்டுவோரைப் 'பிடித்துப் போட்டால்'தான் இனி இங்கு வாழ்க்கை நேராகும்; நேர்மையாகும்.

said...

//யாருக்குத்தான் இல்லை சுய நலம்; ஆனால் அடுத்தவனைக் கெடுத்து நல்லது தேடாமல் இருந்தால் போதுமே.//

சுயநலம் இருக்கலாம் தவறில்லை.
//பிறநலம் தேயினும் வாழ்ந்திடுவோமென
சுயநலம் வாழுது இன்று! //

என்பதைத்தான் சாடியுள்ளேன் இங்கு.
உங்கள் கருத்து சரியே!

said...

புதிய பாரதி,

//சட்டங்கள் செய்தென்ன கண்டோம்? - அதில்
சந்துகள், பொந்துகள் வசதியாய்க் கொண்டோம்!
செல்வம் படைத்தோர்க்கொரு நீதி - பாழும்
வறியவர்க்கு இங்கெங்கே மீதி?//

உண்மை. அருமையாகச் சொன்னீர்கள்.
நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

said...

வெற்றி,
மிக்க நன்றி

said...

//சட்டங்கள் செய்தென்ன கண்டோம்? - அதில்
சந்துகள், பொந்துகள் வசதியாய்க் கொண்டோம்!
//

//அன்றொரு சுதந்திரம் கண்டோம்! -இன்றரசியல்
செய்வோர்க்கு அடிமையாச் சென்றோம்!//
இந்த வரிகளை மிகவும் ரசித்தேன் நவீன பாரதி!!!

said...

//இந்த வரிகளை மிகவும் ரசித்தேன் நவீன பாரதி!!!
//

மிக்க நன்றி யோசிப்பவர்!