தீமை கண்டு தீயாய் எழுவோம்!

Wednesday, August 09, 2006

தில் மாங்கே மோர்!

வெளிநாடுகளில் உடல் நலனிற்கு கேடு விளைவிக்கும் என்று புறந்தள்ளப்பட்ட குளிர்பானங்களான பெப்ஸி, கோலா போன்றவை இந்தியாவில் மட்டும் படு ஜோராக விற்பனை செய்யப்படுவதன் காரணம் என்ன?

அப்பூச்சிக் கொள்ளி மருந்துகளின் விளைவுகளைத் தாங்கிக் கொள்ளும் அளவிற்கு இந்தியனின் உடலில் மட்டும் நோய் எதிர்ப்பு சக்தி எங்கிருந்து வந்தது? இந்தியனின் பரிணாம வளர்ச்சியா?

அரசின் மெத்தனப்போக்கை அறிந்ததனால்தான் அவர்களால் தயாரித்து விற்பனை செய்ய முடிகிறது. எப்போதேனும் ஒரு சமூக நல ஆர்வலர் அல்லது ஆய்வகம் இப்பானங்களை ஆய்வு செய்து ஓர் அறிக்கை விடுவதும், பத்திரிகைகளும் பரபரப்பாக செய்திகள் வெளியிடுவதும் வழக்கமான ஒன்றுதான்.

அரசும் ஆய்வு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்யும். அத்துறையும் ஆய்வுகளை செவ்வனே(!?) செய்து கொண்டிருக்கும். இதர்கிடையில் அரசு அதிகாரிகளுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் சேரவேண்டிய திருப்தியான அறிக்கை(!?) கிடைத்தவுடன் இவ்விஷயம் அப்படியே அமுங்கிப் போயிருக்கும்.

அத்திருப்தியான அறிக்கைகள் சமர்ப்பித்ததால்(!?) லாபத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை அக்குளிர்பான தயாரிப்பு நிறுவனங்களால் எப்படி ஈடு செய்ய முடியும்? அளவைக் குறைக்கவோ, விலையை அதிகரிக்கவோ போட்டிகள் மிகுந்த சந்தையில் இயலாது. தரத்தை வேண்டுமானால் குறைக்கலாம்.

இப்படியே தரம் நாளுக்கு நாள் பெருகி வரும். வழக்கம்போல் கோடைக் காலமும் வரும். கண்ணைக் கவரும் வண்ண விளம்பரங்களும், மக்களின் அபிமானத்திற்குரிய பிரபலங்கலும் அப்பானங்களை அருந்துவது போல் நடித்து விட்டு சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு சென்று விடுவர்.

அரசின் மீதும், ஜனநாயகத்தின் மீதும், பிரபலங்களின் மீதும் அநியாயத்திற்கு நம்பிக்கை வைத்திருக்கும் மிஸ்டர்.பொதுஜனம் வாங்கிப் பருகி விட்டு
"தில் மாங்கே மோர்" என்பார்.

0 comments: