தீமை கண்டு தீயாய் எழுவோம்!

Wednesday, August 09, 2006

மானுடப் பண்பு!

தீயெனச் சுடுகையில் தீண்டிட அச்சமும்- சுனை
நீரெனக் குளிர்கையில் நீந்திட இச்சையும்
கொண்டிடல் மானிடப் பண்பே! - சமமிங்கு
கண்டிட மறந்திடல் நன்றே!

வாழ்வோரைப் போற்றியும், வீழ்வோரைத் தூற்றியும்
பேசுதல் மானுடப் பண்பு! - ஐயா!
மாற்றிட இயலுமோ மானிடரே! எனக்
கேட்டிட வந்ததோர் வம்பு!

3 comments:

said...

அட நவீன பாரதி நன்றாக இருக்கிறது உங்கள் கவிதைகள் :))

said...

வருகைக்கும் விமர்சனத்திற்கும் மிக்க நன்றி நவீன் பிரகாஷ்!

நீங்களும் நல்ல (காதல்) கவிஞர்தான் போலும்.

வாழ்த்துக்கள்.

said...

கருத்து நன்றாயிருக்கிறது