தீமை கண்டு தீயாய் எழுவோம்!

Friday, January 16, 2009

சுரணையை அடகு வைத்து அரியாசணம்

சுரணையை அடகு வைத்து
ஆளுகின்றோம் அரியாசணம்!
தமிழினத்தை ஒழித்துவிட்டு
தமிழினத்தைக் காத்திடலாம்!

ரத்தச் சகதிகளில்
சொந்தமெலாம் வீழ்ந்திருக்க
பதுங்கு குழிகளிலே
மழலைகளும் ஒளிந்திருக்க

குண்டுகள் வீசிடுவார்!
கொன்று குவித்திடுவார்!
பிணங்களையும் வன்புணர்ந்து
பேருவகை அடைந்திடுவார்!

தேடுபொறிக் கருவிகளையும்
தேர்ச்சி பெற்ற பயிற்சிகளையும்
அனுப்பி வைப்போம்
இங்கிருந்து!
நம் கண்ணைக் குத்துதற்கு
நம் விரல்களே உகந்ததன்றோ!

ஈழத்துச் செய்தியெல்லாம்
இருட்டடிப்புச் செய்துவிட்டு
திரையுலகப் பிரபலங்களுடன்
கலைவிழா கண்டிடுவோம்!

செய்தித்தாளில் கூட
வெள்ளித்திரை வேணும் நமக்கு!
வெள்ளித் திரை இல்லையெனில்
வாங்கிட எவர் வருவார்!

இன்னும் கொஞ்சம் உறங்கிடுவோம்!
இப்போதே அவசரமா?
மொத்த இனமும் அழிந்துவிடட்டும்!
மொத்தமாய் விசாரித்துக் கொள்வோம்!

0 comments: