ஆட்டங் காணுதோர் ஆட்சி! ஆளும்
கணவான்கள் கண்ணிலே பறக்குதோர் பூச்சி!
காய்கறி விலையெல்லாம் ஜூட்டு! இங்கே
ராக்கெட்டாய் பறக்குது எம்பிக்கள் ரேட்டு!
வல்லான் ஒருவனை நாடி - அணு
ஆயுதச் சக்தியைக் கோரும் - மந்திரி
ஐயாமாரே கொஞ்சம் கேளீர் - ஏழைத்
தொழிலாளி தட்டிலே எங்கேதான் சோறு?
நம் நாட்டு சேதியவன் தெரிஞ்சிகிட்டு
வாங்கிய பணமெல்லாம் கட்டு கட்டு
அவன் சொல்வதையெல்லாம் நாம் கேட்டுகிட்டு
நம் நிலை என்னன்னு பறை கொட்டு கொட்டு! - இன்று
நம் நிலை என்னன்னு பறை கொட்டு கொட்டு!
தீமை கண்டு தீயாய் எழுவோம்!
Tuesday, July 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment