சாமிகள் எல்லோர்க்கும் ஒன்றடா..!
நடுவில் தூதுசென்றிட நீயும் யாரடா? - என்மொழி
தமிழினில் அர்ச்சனை கேட்கத் தயங்கிடும்
சாமியும் ஊரினில் ஏதடா?
சமத்துவம் பேசுதல் தந்திரமோ!-இங்கு
பேதங்கள் இலையென்றோர் மந்திரமோ!
சட்டையின்றி ஓர் சகதியில் வாடிடும் சக
மானிடர் காண்கையில் சங்கடமோ!
தீமை கண்டு தீயாய் எழுவோம்!
Wednesday, September 27, 2006
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
வணக்கம்,
கவிதை நன்று,
நன்றிகள் பல!
Doondu has left a new comment on your post "சாமிகள் எல்லோர்க்கும் ஒன்றடா..!":
நவீன பாரதி,
பிராமனராக இருந்தாலும் ஜாதி,மதம் பார்க்காதவன் எங்கள் பாரதி. ஆனால் இப்போதுள்ள சில ஜாதி வெறியர்கள் தன் குலமே பெரியது என ஆர்ப்பரிக்கவே யாம் புது அவதாரம் எடுத்து வலைப்பதிவில் நுழைந்தோம்.
எங்களின் புது தளம் விரைவில் புதுப்பொலிவோடு வெளிவரும்
http://poliyar.blogspot.com/
எல்லாம்வல்ல இறைவன் அல்லாஹ் வின் பெயரால்
அல்லாஹு அக்பர் எனும் பெயரோடு வந்திருக்கும் அன்பரே...!
தாங்கள் உண்மையிலேயே இஸ்லாமியரா? அல்லது இஸ்லாமியப் பெயரோடு நுழைந்து சகோதரர்களாய் உறவாடும் எங்களுக்கும், நிஜ இஸ்லாமியர்களுக்கும் சண்டை மூட்டிவிடும் விஷமியா?
இப்புனிதமான ரமலான் மாதத்திலாவது இதுபோன்ற விஷமத்தனங்களை கைவிடும். இது போன்ற விவாதங்களுக்கும், சண்டைகளுக்கும் இது இடமல்ல என்பதையும் தெரிந்து கொள்ளும்.
இதுபற்றி வேரொன்றும் நான் சொல்ல விரும்பவில்லை. மற்றவர்களும் இதனைப் புறக்கணிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மாசிலா வருகைக்கு மிக்க நன்றி!
போலியார் அவர்களே!
புதிய வலைப்பூ கண்டோம்!
பிற பதிவர்கள் இன்னலுறா வண்ணம் நல்ல பதிவுகளைக் கொடுங்கள்!
வாழ்த்துக்கள்.
Post a Comment