தீமை கண்டு தீயாய் எழுவோம்!

Sunday, June 17, 2007

மனதை என்று சுத்தம் செய்வாய்?




பள்ளரென்றும் பறையரென்றும்
பாகுபாடு தந்துவிட்டு
ஆதிமுதல் சாதி காட்டி
அல்லல் எமக்குத் தந்ததென்ன?


பிரம்மனவன் யோனிவழி
பிறந்தவர்கள் நாமென்றால்
பிரம்மனவன் பிறப்பின்வழியும்
எதுவென்றே நீர் கூறுவீரோ?


எம் உழைப்பில் காணா தீட்டை நீயும்
உறவில் மட்டும் உணர்வதென்ன? - நாம்
உழைத்துக் கொடுத்த காசு சுத்தம்!
உழைப்போர் என்றும் அசுத்தமா?


சூத்திரரும் வந்து சென்றால் வீட்டு
வாசல் திண்ணைதனை மாட்டு
மூத்திரத்தால் கழுவிடும் நீ - உம்
மனதை என்று சுத்தம் செய்வாய்?

8 comments:

said...

புற்று நோயாய் புரையோடிப் போன ஒரு சமூக அவலத்திற்கு நவீன சாட்டையடி...

keep it up, முண்டாசுக் கவிஞ்ஞ.

said...

//எம் உழைப்பில் காணா தீட்டை நீயும்உறவில் மட்டும் உணர்வதென்ன? - //

நச் வரிகள்...

said...

வருகைக்கும் பகிர்ந்துகொண்ட உணர்வுக்கும் நன்றிகள் பல

தெகா மற்றும் நாகை சிவா!

said...

நல்ல கவிதை....

//எம் உழைப்பில் காணா தீட்டை நீயும்உறவில் மட்டும் உணர்வதென்ன? - நாம்உழைத்துக் கொடுத்த காசு சுத்தம்!உழைப்போர் என்றும் அசுத்தமா?//

அருமை...

said...

இராம்,

மிக்க நன்றி!

said...

அருமையான கவிதைகள்.

நான் இதுபோல் எழுதும் போது பின்னூட்டத்தில் கவனம் தேவை. என் பதிவில் சொறிநாய்க்கு பிறந்த தெருநாய் ஒன்று மூத்திரம் போனது.

வேறு வழியின்று கழுவினேன்.

said...

//அருமையான கவிதைகள்.//

மிக்க நன்றி கோவி.கண்ணன் அவர்களே!


//என் பதிவில் சொறிநாய்க்கு பிறந்த தெருநாய் ஒன்று மூத்திரம் போனது.

வேறு வழியின்று கழுவினேன்.
//

சில விலங்குகள் வந்து செல்லும்போது கழுவி விடத்தான் வேண்டியிருக்கிறது.

said...

//பள்ளரென்றும் பறையரென்றும்பாகுபாடு தந்துவிட்டுஆதிமுதல் சாதி காட்டிஅல்லல் எமக்குத் தந்ததென்ன?//
ஆதி முதல் என்று நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்

//பிரம்மனவன் யோனிவழிபிறந்தவர்கள் நாமென்றால்பிரம்மனவன் பிறப்பின்வழியும்எதுவென்றே நீர் கூறுவீரோ?
//
பாரதி இப்படி எழுத மாட்டான் என்றே நினைக்கிறேன்


//எம் உழைப்பில் காணா தீட்டை நீயும்உறவில் மட்டும் உணர்வதென்ன?//
உண்மையிலேயே நன்றாயிருக்கிறது!!!