தீமை கண்டு தீயாய் எழுவோம்!

Sunday, June 17, 2007

மனதை என்று சுத்தம் செய்வாய்?




பள்ளரென்றும் பறையரென்றும்
பாகுபாடு தந்துவிட்டு
ஆதிமுதல் சாதி காட்டி
அல்லல் எமக்குத் தந்ததென்ன?


பிரம்மனவன் யோனிவழி
பிறந்தவர்கள் நாமென்றால்
பிரம்மனவன் பிறப்பின்வழியும்
எதுவென்றே நீர் கூறுவீரோ?


எம் உழைப்பில் காணா தீட்டை நீயும்
உறவில் மட்டும் உணர்வதென்ன? - நாம்
உழைத்துக் கொடுத்த காசு சுத்தம்!
உழைப்போர் என்றும் அசுத்தமா?


சூத்திரரும் வந்து சென்றால் வீட்டு
வாசல் திண்ணைதனை மாட்டு
மூத்திரத்தால் கழுவிடும் நீ - உம்
மனதை என்று சுத்தம் செய்வாய்?